756342548 3272183813169435 6053670270648093974 n

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை அஞ்சல் திணைக்களம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்று போட்டியானது இன்றைய தினம் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை  நடைபெற்றது 
இத்தொடரில் பங்குபற்றிய எமது அணியானது
 
1)வல்வெட்டித்துறை நகரசபை அணி
2)பருத்தித்துறை பொலிஸ் அணி  
 
ஆகியஇரண்டையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது
இறுதிப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியானது மந்திகை ஆதார வைத்தியசாலை அணியுடன் எதிர்கொண்டு விளையாடி சம்பியன் பட்டத்தை  தனதாக்கிக் கொண்டது இன்றைய தினம் இந்த சுற்றுப்போட்டியில் எமது அணியினை  நிர்வாக உத்தியோகத்தர் மதிப்பிற்குரிய திரு.மா.முரளி அவர்கள்  தலைமையேற்று வழி நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய இறுதிப் போட்டியின் ஆட்டநாயகவும் இவ் சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டநாயகனாகவும் திரு.சி.நந்தகுமார் அவர்களும் இறுதிப் போட்டியின் சிறந்த பந்துச்சாளராக திரு.வரதவேல் மிதுரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள்  பங்குபற்றிய  அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள்.
 

குடியுரிமை சாசனம்

Scroll To Top