
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
Clean_Srilanka_1st day_Program
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரத் தொடக்க நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று எமது செயலகத்தில் நடைபெற்றது.
ஜூலை 27 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியை "கிளீன் ஸ்ரீலங்கா - தேசிய நேர்மை வாரம்" என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு அங்கமாக, நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதலாம் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9:00 மணிக்கு செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்வைத் தொடர்ந்து, எமது செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில்
ஒரு அரச உத்தியோகத்தருக்கு இருக்க வேண்டிய பண்புகள், மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து போதை ஒழிப்பு உத்தியோகத்தரால் போதை பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.






வருடாந்த விளையாட்டு விழா - 2026
எமது செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2026 29/06/2026 அன்று பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலாளர் ம.ப. தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க.விஜிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.































