756342548 3272183813169435 6053670270648093974 n

“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரத் தொடக்க நிகழ்வு மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று எமது செயலகத்தில் நடைபெற்றது.
​ஜூலை 27 முதல் ஜூலை 31 வரையான காலப்பகுதியை "கிளீன் ஸ்ரீலங்கா - தேசிய நேர்மை வாரம்" என ஜனாதிபதி செயலகத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு செயற்பாடுகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
​இதன் ஒரு அங்கமாக, நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான முதலாம் நாள் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று (27.07.2026) காலை 9:00 மணிக்கு செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
​நிகழ்வைத் தொடர்ந்து, எமது செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுகையில்
​ஒரு அரச உத்தியோகத்தருக்கு இருக்க வேண்டிய பண்புகள், மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார்.
​
அதனைத் தொடர்ந்து போதை ஒழிப்பு உத்தியோகத்தரால் போதை பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நடாத்தப்பட்டது.
 
எமது செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2026 29/06/2026 அன்று பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலாளர் ம.ப. தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க.விஜிதரன் அவர்களும் கல‌ந்து சிறப்பித்திருந்தனர்.
 
சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய வேலைத்திட்டம்.
 
 
இன்றே மாற்றத்தை செய்து மின்சாரத்தை சேமிப்போம்.
 
💡தேவையற்ற மின் பயன்பாடு
 
அறையில் யாரும் இல்லாத போது மின்விளக்குகள் மற்றும் விசிறிகளை அணைத்தல்.
 
💡மின் உபகரணங்களின் பயன்பாடு
 
 அதிக மின்சாரம் தேவைப்படும் உபகரணங்களை (உதாரணமாக: அயர்ன் பாக்ஸ், வாஷிங் மெஷின்) மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் (Peak Hours: 6:30 PM - 9:30 PM) பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
 
💡இயற்கை வெளிச்சம் 
 
பகல் நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்து இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் பயன்படுத்துதல்.
 
💡கூட்டுப் பொறுப்பு 
 
இது ஒரு தனிநபரின் முயற்சி மட்டுமல்ல, முழு தேசத்தினதும் பொறுப்பு என்பதை வலியுறுத்துதல்.
 
💡பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்
 
💡 சாதாரண குமிழிகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தை நுகரும் LED விளக்குகளைப் பயன்படுத்துதல்.
 
💡தொலைக்காட்சி மற்றும் கணினி போன்றவற்றை ரிமோட் மூலம் மட்டும் அணைக்காமல், பிரதான சுவிட்சை அணைத்தல்.
 
 💡நீர் இறைப்பதற்கான மின்சாரத்தைச் சேமிக்க நீரை வீணாக்காமல் பயன்படுத்துதல்.
 
"சிக்கனமான பயன்பாடு - வளமான எதிர்காலம்" > நாட்டின் தற்போதைய சூழலில், ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தைச் சேமிப்பதும் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.
 
IMG 20260402 WA0008
Scroll To Top