
ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
பருத்தித்துறை அஞ்சல் திணைக்களம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்று போட்டி - 2025
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை அஞ்சல் திணைக்களம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்று போட்டியானது இன்றைய தினம் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது
இத்தொடரில் பங்குபற்றிய எமது அணியானது
1)வல்வெட்டித்துறை நகரசபை அணி
2)பருத்தித்துறை பொலிஸ் அணி
ஆகியஇரண்டையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது
இறுதிப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியானது மந்திகை ஆதார வைத்தியசாலை அணியுடன் எதிர்கொண்டு விளையாடி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது இன்றைய தினம் இந்த சுற்றுப்போட்டியில் எமது அணியினை நிர்வாக உத்தியோகத்தர் மதிப்பிற்குரிய திரு.மா.முரளி அவர்கள் தலைமையேற்று வழி நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய இறுதிப் போட்டியின் ஆட்டநாயகவும் இவ் சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டநாயகனாகவும் திரு.சி.நந்தகுமார் அவர்களும் இறுதிப் போட்டியின் சிறந்த பந்துச்சாளராக திரு.வரதவேல் மிதுரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள் பங்குபற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள்.


வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா - 2025
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா (09.09.2025) அன்றைய தினம் இடம்பெற்றது.
තවත් කියවන්න: வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா - 2025
புதிய பிரதேச செயலரை வரவேற்றல்
இன்றைய தினம் 25.08.2025 புதிய பிரதேச செயலாளராக திரு.ந.திருலிங்கநாதன் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை வாழ்த்தி வரவேற்கின்றோம்.





Clean Sri Lanka Awareness Program 20/01/2025
Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - 20.01.2025
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

























