
ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
"தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி" - 'அத்தம' தேசிய நிகழ்ச்சித் திட்டம்
"தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி" - 'அத்தம' தேசிய நிகழ்ச்சித் திட்டம் அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பில் 08/08/2026 அன்று எமது செயலக 35 கிராம அலுவலர் பிரிவுகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் முதற்கட்டமாக J/404- தும்பளை, J/407 - புலோலி வடக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் அமைந்துள்ள மாதனை கற்கோவளம் வீதி மற்றும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் நிகழ்வு எமது செயலக பிரதேச செயலாளர் திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையிலும், J/386- கெருடாவில் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நெற்கொழு குளம் மற்றும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் திரு.ம.ப.தயானந்தன் அவர்களின் தலைமையிலும், ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளில் எமது செயலக ஒவ்வொரு உத்தியோகத்தர்கள் தலைமையிலும் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற் திட்டத்தின் மாகாண இணைப்பாளர் திரு. எஸ். கபிலன்,
எமது செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.செ.சுபச்செல்வன், கிளீன் ஸ்ரீலங்கா பருத்தித்துறை பிரதேச இணைப்பாளர் மயூரன், பிரதேச சபை உப தவிசாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பருத்தித்துறை பிரதேச சுகாதார உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், சமூக சக்தி தலைவர்கள், இராணுவத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். "Humedica"வேலும் மயிலும் பவுண்டேஷன் நிறுவனத்தினால் கையுறை மற்றும் முக்கவசங்களும் இச்செயற்திட்டத்திற்காக வழங்கி வைக்கப்பட்டது.
























Clean_Srilanka_5th day_Program_Siramathanam
"நேர்மையான கலாசாரம் தூய்மையான இலங்கை" தேசிய நேர்மை வாரத்தின் 5 ஆம் நாள் நிகழ்வு
சூழல் நேயமான பொறுப்பான சமூகத்திற்காக நிலையான நேர்மைமிக்க பசுமை கலாசாரத்திற்கு அடித்தளத்தை அமைப்போம் என்னும் தொனிப்பொருளில் எமது செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி முன்னெடுக்கபட்டது.



























