756342548 3272183813169435 6053670270648093974 n

எதிர்வரும் 11.09.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ ஏற்பாட்டு கூட்டமானது 18/08/2026 இன்று எமது செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் திரு.ம.ப.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை மாவட்ட நீதி மன்ற பதிவாளர் ஆகியோரும் ஏனைய தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
778591035 3296069047447578 1304778489362564968 n
777825430 3296068984114251 6189029044883018264 n774863029 3296068930780923 8544464725610327969 n

பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை QR ஐ Scan செய்து நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

 

Complaint QR

"தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி" - 'அத்தம' தேசிய நிகழ்ச்சித் திட்டம் அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பில் 08/08/2026 அன்று எமது செயலக 35 கிராம அலுவலர் பிரிவுகளிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் முதற்கட்டமாக J/404- தும்பளை, J/407 - புலோலி வடக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் அமைந்துள்ள மாதனை கற்கோவளம் வீதி மற்றும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் நிகழ்வு எமது செயலக பிரதேச செயலாளர் திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் தலைமையிலும், J/386- கெருடாவில் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நெற்கொழு குளம் மற்றும் சுற்றுச் சூழல் தூய்மைப்படுத்தும் நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் திரு.ம.ப.தயானந்தன் அவர்களின் தலைமையிலும், ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளில் எமது செயலக ஒவ்வொரு உத்தியோகத்தர்கள் தலைமையிலும் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் “கிளீன் ஸ்ரீலங்கா” செயற் திட்டத்தின் மாகாண இணைப்பாளர் திரு. எஸ். கபிலன்,
எமது செயலக திட்டமிடல் பணிப்பாளர் திரு.செ.சுபச்செல்வன், கிளீன் ஸ்ரீலங்கா பருத்தித்துறை பிரதேச இணைப்பாளர் மயூரன், பிரதேச சபை உப தவிசாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பருத்தித்துறை பிரதேச சுகாதார உத்தியோகத்தர், பிரதேச சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், சமூக சக்தி தலைவர்கள், இராணுவத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். "Humedica"வேலும் மயிலும் பவுண்டேஷன் நிறுவனத்தினால் கையுறை மற்றும் முக்கவசங்களும் இச்செயற்திட்டத்திற்காக வழங்கி வைக்கப்பட்டது.
 
769441948 3285380161849800 3379068464889208578 n769309205 3285381871849629 7174427090534226055 n769309205 3285382328516250 1361401727097512456 n765929044 3285381988516284 949344209036464303 n768347644 3285381775182972 2256899494253085171 n767268755 3285381798516303 681090170007503135 n765769667 3285382081849608 4509581694632612996 n765871846 3285381935182956 2801920348833581464 n766674314 3285381968516286 5344822481914974080 n766797105 3285381851849631 4611378778196792613 n769309206 3285382038516279 5881312054870255761 n768309985 3285382105182939 2852144064197812423 n
766736749 3285384348516048 4560923967771439902 n765871865 3285383571849459 3013593991710332141 n767540340 3285384321849384 7445319160232402948 n768949701 3285383785182771 7233730060913347573 n769130251 3285384278516055 2345395467774712389 n768347639 3285383781849438 2053985397903052636 n767161441 3285383588516124 4949029305604467812 n742838359 3285383168516166 661128509646951288 n767130698 3285384025182747 8698350538554067019 n768969608 3285384245182725 4658558904901843121 n770774406 3285384421849374 6333072513866413805 n768361014 3285383678516115 8290266995343189612 n

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் கேள்வி கோரல் தொடர்பானது

 

11.08.2026

"நேர்மையான கலாசாரம் தூய்மையான இலங்கை" தேசிய நேர்மை வாரத்தின் 5 ஆம் நாள் நிகழ்வு
சூழல் நேயமான பொறுப்பான சமூகத்திற்காக நிலையான நேர்மைமிக்க பசுமை கலாசாரத்திற்கு அடித்தளத்தை அமைப்போம் என்னும் தொனிப்பொருளில் எமது செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணி முன்னெடுக்கபட்டது.
759360445 3277078546013295 4218975778899166903 n760964388 3277080106013139 8774761499529129171 n761355126 3277080272679789 3247750287959411811 n761596416 3277080149346468 3931440885351286930 n761719298 3277079999346483 6512761728800065299 n762916564 3277080229346460 8200740427079270211 n

குடியுரிமை சாசனம்

Scroll To Top