
எமது பிரதேச செயலகத்தில் 4 வருடங்கள் 7 மாதங்களாக நிர்வாக உத்தியோகத்தராக அர்ப்பணிப்புடன் கடமையாற்றி இன்றைய தினத்துடன் 29.09.2025 இலங்கை நிர்வாக சேவையிற்கு பதவியுயர்வு பெற்றுச்செல்லும் மதிப்பிற்குரிய திரு.மா.முரளி அவர்களுக்கான
சேவைநலன் பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும்






















உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பருத்தித்துறை அஞ்சல் திணைக்களம் நடாத்திய மென்பந்தாட்ட சுற்று போட்டியானது இன்றைய தினம் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெற்றது
இத்தொடரில் பங்குபற்றிய எமது அணியானது
1)வல்வெட்டித்துறை நகரசபை அணி
2)பருத்தித்துறை பொலிஸ் அணி
ஆகியஇரண்டையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டது
இறுதிப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலக அணியானது மந்திகை ஆதார வைத்தியசாலை அணியுடன் எதிர்கொண்டு விளையாடி சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது இன்றைய தினம் இந்த சுற்றுப்போட்டியில் எமது அணியினை நிர்வாக உத்தியோகத்தர் மதிப்பிற்குரிய திரு.மா.முரளி அவர்கள் தலைமையேற்று வழி நடாத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய இறுதிப் போட்டியின் ஆட்டநாயகவும் இவ் சுற்றுத்தொடரின் தொடர் ஆட்டநாயகனாகவும் திரு.சி.நந்தகுமார் அவர்களும் இறுதிப் போட்டியின் சிறந்த பந்துச்சாளராக திரு.வரதவேல் மிதுரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள் பங்குபற்றிய அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வாழ்த்துக்கள்.


இன்றைய தினம் 25.08.2025 புதிய பிரதேச செயலாளராக திரு.ந.திருலிங்கநாதன் அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை வாழ்த்தி வரவேற்கின்றோம்.





வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசாரப் பேரவையும் இணைந்து கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா (09.09.2025) அன்றைய தினம் இடம்பெற்றது.
மேலும் படிக்க: வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பண்பாட்டுப் பெருவிழா - 2025
Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு - 20.01.2025
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



















