
எமது செயலக பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான வருடாந்த விளையாட்டு விழா - 2026 29/06/2026 அன்று பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தில் மதிப்புக்குரிய உதவி பிரதேச செயலாளர் ம.ப. தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க.விஜிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
















"சுரகிமு லங்கா"(இலங்கையை காப்போம்) தேசிய நிகழ்ச்சித் திட்டம்!
சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (இலங்கையை காப்போம்) தேசிய திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி வளங்களை மிகவும் பொறுப்புடன் பாதுகாக்கும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலினால் நாட்டின் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றங்கள் குறித்த கணிப்புகளைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அரச வளங்களை மிக சிக்கனமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள அரசாங்கம், தேசிய வலுசக்தி பாதுகாப்பிற்காக பொதுமக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்வதே இதன் பிரதான எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் அடுத்த ஐந்து மாத காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
“செல்வச் செழிப்புமிக்க நாடு – அழகான வாழ்க்கை” எனும் தொலைநோக்கின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் ஒரு பகுதியாக, “சுரகிமு லங்கா – ஒன்றிணைவோம் – ஒளியூட்டுவோம்” என்ற தொனிப்பொருளில் இது செயற்படுத்தப்படுகிறது.
இதற்காக அரச, அரச அனுசரணை மற்றும் தனியார் துறையினருடன் சிவில் சமூகம் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை, மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள அல்லது அதிக மின்சாரம் தேவைப்படும் வேலைகளை முடிந்தவரை பகல் நேரங்களில் செய்து முடிக்க மக்களை ஊக்குவிப்பதே “சுரகிமு லங்கா” திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரப் பயன்பாட்டிற்கு எவ்வித தடைகளும் அல்லது கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மின் உற்பத்தியில் பெரும்பகுதி நீர் மின்சாரம் மூலம் கிடைப்பதால், வருங்காலத்தில் நீரையும் மிகச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்களிடையே மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த ஒரு மனப்பாங்கு மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்களைத் தாமாகவே முன்வந்து இத்திட்டத்தில் இணையச் செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும்.

சக்திவளத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு பொதுமக்களை ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட "சுரகிமு லங்கா" (#இலங்கையை #காப்போம்) தேசிய வேலைத்திட்டம்.
இன்றே மாற்றத்தை செய்து மின்சாரத்தை சேமிப்போம்.
தேவையற்ற மின் பயன்பாடுஅறையில் யாரும் இல்லாத போது மின்விளக்குகள் மற்றும் விசிறிகளை அணைத்தல்.
மின் உபகரணங்களின் பயன்பாடு அதிக மின்சாரம் தேவைப்படும் உபகரணங்களை (உதாரணமாக: அயர்ன் பாக்ஸ், வாஷிங் மெஷின்) மின்சாரத் தேவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் (Peak Hours: 6:30 PM - 9:30 PM) பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
இயற்கை வெளிச்சம் பகல் நேரங்களில் ஜன்னல்களைத் திறந்து வைத்து இயற்கை வெளிச்சத்தையும் காற்றையும் பயன்படுத்துதல்.
கூட்டுப் பொறுப்பு இது ஒரு தனிநபரின் முயற்சி மட்டுமல்ல, முழு தேசத்தினதும் பொறுப்பு என்பதை வலியுறுத்துதல்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய எளிய வழிமுறைகள்
சாதாரண குமிழிகளுக்குப் பதிலாக குறைந்த மின்சாரத்தை நுகரும் LED விளக்குகளைப் பயன்படுத்துதல்.
தொலைக்காட்சி மற்றும் கணினி போன்றவற்றை ரிமோட் மூலம் மட்டும் அணைக்காமல், பிரதான சுவிட்சை அணைத்தல்.
நீர் இறைப்பதற்கான மின்சாரத்தைச் சேமிக்க நீரை வீணாக்காமல் பயன்படுத்துதல்."சிக்கனமான பயன்பாடு - வளமான எதிர்காலம்" > நாட்டின் தற்போதைய சூழலில், ஒவ்வொரு யூனிட் மின்சாரத்தைச் சேமிப்பதும் நாட்டுக்குச் செய்யும் மிகப்பெரிய சேவையாகும்.

தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு 05.11.2025
யாழ் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் J/401 கிராம சேவையாளர் பிரிவில் நடைபெற்ற சர்வதேச சுனாமி ஒத்திகை நிகழ்வு.































